×

ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜன. 10: ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நேற்று சென்ட்ரல் ரயில்வே தலைமை அலுவலகம் முன், எஸ்.ஆர்.இ.எஸ்- என்.எப்.ஐ.ஆர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம், எஸ்.ஆர்.இ.எஸ்- என்.எப்.ஐ.ஆர் தலைவர் முரளி, செயலாளர் குமரவேல், சூரியபிரகாசம் மதன், மனோ, ராகுல் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், எம்.சி.எப்பை கார்ப்ரேட்டுக்கு கொடுப்பதை கண்டித்தும், ஐசிஎப் உள்ளிட்ட புரெடக்‌ஷன் பிரிவுகள், ஒர்க்‌ஷாப்கள், ஐ.ஆர்.ஆர்.எஸ்.சி ஆக மாற்றி தனியாருக்கு மாற்றுவதையும், ராயபுரம் உள்ளிட்ட அனைத்து பிரின்டிங் பிரஸ்களை மூடுவதையும், 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை கலைந்து குறைந்த பட்ச சம்பளம் ₹26 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திம் கோஷம் எழுப்பினர்.

Tags : Trade unions ,government ,railways ,
× RELATED வேலை நிறுத்தம் தொடர்பாக...