×

இலவச வேட்டி சேலை வழங்கும் விழா

பொன்னமராவதி, ஜன.10: ஆலவயலில் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் தமிழக அரசின் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. பொன்னமராவதி தாசில்தார் தமிழக அரசின் இலவச இலவச வேட்டி சேலைகள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர் சந்திரா சக்திவேல், துணை தாசில்தார்கள் பிரகாஷ், ராஜா விஏஓ.பாண்டியன், கிராம உதவியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல தூத்தூர், கண்டியாநத்தம் உட்பட பல இடங்களில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.


Tags : Veti Saree Ceremony ,
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது