×

கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த 80கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.10,000க்கு ஏலம்

மணமேல்குடி ஜன.10: கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு 80 கிலோ எடையுள்ள ராட்சத திருக்கை மீன் விற்பனைக்கு வந்தது.புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்த மீனவரின் வலையில் 80 கிலோ எடையுள்ள ராட்சத திருக்கை மீன் கிடைத்தது. இந்த மீன் அதிக எடையுடன் இருந்ததால் மீனவர்களால் அதை மீட்க முடியவில்லை. பிறகு கயிறு மூலம் கட்டி கரைக்கு இழுத்து வரப்பட்டு பல மீனவர்கள் சேர்ந்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தள்ளுவண்டி மூலமாக மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன் 80 கிலோவுக்கும் மேல் இருந்தது. இந்த மீன் ஒரு கிலோ சராசரியாக 130 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஏலக்கடையில் இது 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி இதை ஏலம் எடுத்து தன்னுடைய சரக்கு வாகனத்தின் மூலம் புதுக்கோட்டை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றார்.இந்த ராட்சத திருக்கை மீனை மார்க்கெட்டிற்கு வந்தவர்கள் மிகவும் ஆச்சரியமாக பார்வையிட்டனர். இதனால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

Tags : Katumavadi Fish Market ,
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது