×

மர்ம நபருக்கு வலைவீச்சு மாநில அளவில் குத்து சண்டை போட்டி பெரம்பலூர் அரசு பள்ளி மாணவர் சாதனை

பெரம்பலூர்,ஜன.10: பள்ளி க்கல்வித்துறை சார்பில் நடந்த மாநில குத்துச்சண் டை போட்டியில் பெரம்பலூர் அரசு பள்ளி மாணவர் 3 இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பென்னகரம் ஜெயம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடந்தது. இதில் மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பாடாலூர் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி மாணவன் விக்னேஷ் என்பவர் 3 இடத்தை பிடித்து வெண்கலம் பதக்கத்தை வென்றார்.மாநில அளவிலான குத்து ச்சண்டை போட்டியில் 3ம் இடம் பிடித்த மாணவன் விக்னேஷை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் பாராட்டி வாழ்த்தினார்.நிகழ்ச்சியின்போது, வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் குழந்தைராசன், முதன் மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன், பள்ளித்தலைமை ஆசிரியர் நல்லுசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சீனிவாசன், பிரேமாமேரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Perambalur Government School Student Achievement ,
× RELATED சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது...