×

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏடிஎம் மையத்தில் டிரைவரிடம் நூதன முறையில் ரூ.30,000 மோசடி

பெரம்பலூர், ஜன.10:பெரம்பலூரில் ஏடிஎம் மையத்தில் ஆட்டோ டிரைவரிடம் நூத ன முறையில் ரூ.30 ஆயிரம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடிவரு கின்றனர்.பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாலகிருஷ்ணன்(47). இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவரான தனது மருமகன் பாலமுருகன் (25) என்பவரிடம் தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணம் எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார்.இதையடுத்து பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் செ ன்று பாலமுருகன் பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது உள்ளே வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், தான் பணம் எடுத்து தருவதாக கூறியதையடுத்து பாலமுருகன் தன்னிடம் இருந்த ஏடிஎம் கார்டை அந்த இளை ஞரிடம் கொடுத்துள்ளார்.

ஏடிஎம் கார்டை பெற்றுக் கொண்ட அந்த இளைஞர் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முயன்றும் வரவில்லையாம். இதையடுத்து தான் கொடுத்த அட்டையை திரும்ப பெற்றுக்கொண்டு பாலமுருகன் வெளியே சென்றுவிட்டார். பின்னர் மாமனார் பாலகிருஷ்ணனை தொடர் புகொண்டு ரகசிய எண் தவறாக உள்ளதாகவும், பணம் எடுக்க முடியவில்லை எனவும் பாலமுருகன் கூறியுள்ளார். இதனிடை யே தனது கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுத்து விட்டதாக பாலகிருஷ்ணனின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பால கிருஷ்ணன் உடனே பாலமுருகனைத் தொடர்பு கொண்டு ஏடிஎம் அட்டையில் உள்ள பெயரை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.அப்போது மர்ம நபர் போலியான ஏடிஎம் கார்டு கொடுத்துவிட்டு பாலகிருஷண் ணின் கொடுத்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் பணத்தை மோச டியாக எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதி வான பதிவுகளைக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட இளைஞரைத் தேடி வருகி ன்றனர்.

Tags : District Principal Session Judge ,
× RELATED பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு...