×

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு அதிகாரிகளுடன் டிஆர்ஓ ஆய்வு

பெரம்பலூர், ஜன. 10: பெரம்பலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தை முன்னி ட்டு மேற்கொள்ள வேண்டி ய முன்னேற்பாட்டுப் பணிக ள் குறித்து, அனைத்துத் து றை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசுதினம் வரும் (26ம் தேதி) கொண்டாடப்படுவ தை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவ லர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று (9ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலை மைவகித்துப் பேசியதா வது :குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண் டும். விழா நடைபெறும் நாளன்று காவல் துறையி னர் மூலம் காவல் துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகு ப்பு உள்ளிட்டவற்றை சிறப் பாக நடத்திட காவல்துறை யினர் தகுந்த ஏற்பாடு செய் திட வேண்டும். விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளி கள் அமரும் இடம் ஆகியவ ற்றிற்கு முறையான இடங் களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க வருவாய்த்துற ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப்போ ராட்ட தியாகிகளுக்குப் பொன்னாடை போர்த்துதல் உள்ளிட்ட பணிகளையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக கல் லூரி மற்றும் பள்ளி மாண வ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்தல் பணிகளையும் சிறப்பாக செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை சம் மந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும்.அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் பயனா ளிகளுக்கு அரசின் நலத்தி ட்ட உதவிகள் மாவட்ட கலெக்டரால் விழாவில் வழ ங்கப்பட உள்ளதை முன்னிட்டு, பயனாளிகளை விழா நடைபெறும் இடத்திற்கு தகுந்த நேரத்தில் வருகை புரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.அனைவருக்கும்குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதி களைகளை குறைவின்றி ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் ஆர்டிஓ சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜரா ஜன், துணை கண்காணிப்பாளர் கென்னடி, கட்டிட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், வேளாண்மைத் துறை இணை இய க்குநர் கணேசன் மற்றும் பிற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Republic Day Celebration Officers ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி