×

பேராவூரணி வட்டத்தில் இன்று மின்தடை கிடையாது

பேராவூரணி, ஜன. 10: பேராவூரணி வட்டத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று (10ம் தேதி) மின்சார வாரியத்தால் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்சார வாரியம் மின்தடை அறிவிப்பை ரத்து செய்துள்ளது.மின் தடை தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Peravurani Circle ,
× RELATED வெள்ளி மலர் வெள்ளிதோறும் படியுங்கள்...