×

சீர்காழியில் பொங்கலுக்கு செங்கரும்பு அறுவடைக்கு தயார்

சீர்காழி, ஜன.10: நாகை மாவட்டம் சீர்காழியில் பொங்கல் அறுவடைக்கு செங்கரும்பு தயாராக உள்ளது. ஆனால் வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சீர்காழி அருகே செம்பதனிருப்பு, அள்ளிவிளாகம், காத்திருப்பு, நடராஜ பிள்ளை சாவடி, இளைய மதுக்கூடம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 250 ஏக்கரில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே செங்கரும்பு பயிரிட்டு இருந்தனர். இந்த செங்ரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி வருவதையொட்டி செங்கரும்புகளை விற்பனை செய்ய விவசாயிகள் தயாராக உள்ளனர்.

இதற்காக விவசாயிகள் செங்கரும்புகளில் உள்ள சோலைகளை அகற்றி கரும்புகளை வெட்டுவதற்கு தேவையான பணிகளை செய்து வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் கரும்புகள் வாங்க வெளியூரிலிருந்து அதிக அளவில் வியாபாரிகள் வரவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் செங்கரும்பு விற்பனை குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் கரும்புகளை வாங்கி சென்றால் மட்டுமே லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஒரு செங்கரும்பு ரூ.15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகின்றன. உள்ளூர் வியாபாரிகள் செங்கரும்புகளை அதிகளவில் வாங்கி சென்றால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பு பொங்கலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : Pongal ,Sirkazhi ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!