×

காலை டிபன் அரைமணி நேரம் லேட் மருமகளிடம் கோபித்துக்கொண்டு ரயிலேறி வந்த மாமியார்

மயிலாடுதுறை, ஜன.10: மயிலாடுதுறையில் காலை உணவு தாமதமாக வழங்கிய மருமகளிடம் கோபித்துக்கொண்டு ரயிலேறி வந்த மாமியாரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை 75 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சோகமே உருவாக அமர்ந்திருந்தார், அவர் அங்கேயே நீண்டநேரம் அமர்ந்திருந்ததைக் கண்ட ரயில்வே போலீசார் மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது மவுனமாக இருந்த அவர் பதில் சொல்ல மறுத்தார். போலீசாரின் அறிவுரையைக் கேட்டபிறகு அவர் தனது விவரத்தை தெரிவித்தார். கடலூர் லாரன்ஸ் தெருவை சேர்ந்த முனியப்பன் மனைவி அஞ்சலை (75) என்றும், வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் கடலூரில் உள்ள உறவினர்களுக்க தகவல் தெரிவித்தனர். இரவு 10 மணிக்கு அவரது உறவினர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையம் சென்று அஞ்சலையைப் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறினர். உறவினர்களிடம் என்ன நடந்தது என்று போலீசார் விசாரித்தபோது, அஞ்சலைக்கு எப்பொழுதும் காலை 8 மணிக்கு காலை உணவு அளிப்பது வாடிக்கை. இன்றைக்கு (நேற்று) உணவளிக்க மருமகள் தாமதமாக்கி விட்டார். காலை 8.30 மணிக்குதான் உணவளித்துள்ளார். இதனால் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு உட்கார்ந்திருந்தவர் திடீரென ரயில் ஏறி மயிலாடுதுறை வந்துவிட்டார் என்று கூறினர். பின்னர் அஞ்சலையை உறவினர்கள் அழைத்துச்சென்றனர்.


Tags : Tiban ,daughter-in-law ,
× RELATED பிரசாரமா…டிபன் டைமா..பூரி சுட்ட ஜி.கே.வாசன்; வடை தின்ற தமிழிசை