×

வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்

வேதாரண்யம், ஜன.10: வேதாரண்யத்தில் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.வேதாரண்யம் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் பேரவை தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நடந்தது. பேரவை செயலாளர் தங்கவேல் வரவேற்றார். வரவு செலவு அறிக்கையினை பேரவை பொருளாளர் குழந்தைவேலு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.கூட்டத்தில் மரக்கன்று நடுதல், மாணவர்களுக்கு இளமையிலேயே நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் போன்ற கருத்துருக்கள் வலியுறுத்தப்பட்டது.மேலும் வேதாரண்யம் நகராட்சியில் அமைந்துள்ள நூலகத்திற்கு புதியதாக கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். வேதாரண்யம் நகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியை கேட்டுக் கொள்வது, கஜா புயலால் சேதமுற்ற காந்தி பூங்காவினை சீர் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Tags : Senior Citizens Council Meeting ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்