×

அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டலம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் 12ம்தேதி முதல் இயக்கப்படுகிறது

நாகை, ஜன.10: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் நாகை மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார்.வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குடந்தை கோட்டம் நாகை மண்டலம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித இடையூறும் இன்றி பயணம் செய்ய சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் குடந்தை போக்குவரத்து கழக இயக்க பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு வருகிற 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர பஸ்களும் பயணிகள் வசதிக்காக இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு வழியாக இயக்கும் பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். பொங்கல் முடிந்து திரும்ப வசதியாக வருகிற 15ம்தேதி முதல் 20ம்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags : State Transport Corporation ,NTC ,Pongal ,festival ,
× RELATED அரசு போக்குவரத்து கழகத்தில் போதைப்...