×

போக்குவரத்து நெரிசலை தடுக்க ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி, ஜன. 10:     கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்ட பின்னர் நகரத்தில் நாளுக்கு நாள் தொடரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பஸ்நிலையம் எதிரே கச்சேரி சாலை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள் மற்றும் காவல்நிலையம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள கார், டிராவல்ஸ் வேன் ஆகியவை மாற்று இடத்தில் நிறுத்த இடம் தேர்வு செய்யும் விதமாக முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதாவது காவல்நிலையம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள கார், டிராவல்ஸ் வேன் ஆகியவை கோட்டைமேடு பகுதி சாலையின் ஓரமாக காலியான இடத்தில் நிறுத்தவும், கச்சேரி சாலை பகுதியில் உள்ள ஆட்டோக்கள் காவல்நிலையம் பகுதியில் ஏற்கனவே கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் நிறுத்தவும் இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. அதனையடுத்து கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தேவஇறக்கம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர்.  

 அதனை தொடர்ந்து உதவி கோட்ட பொறியாளர் பிரபாகர் தலைமையில் உதவி பொறியாளர் சர்மா மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்களை கொண்டு 4 பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டனர். அப்போது 100க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. அவற்றை அகற்றும் பணிகள் நடந்தது. அப்போது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்டாமல் இருக்க கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் (சட்டஒழுங்கு) விஜயகுமார், (போக்குவரத்து) பார்த்திபன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...