×

துப்பு கொடுத்தால் பரிசு கேரள போலீஸ் அறிவிப்பு பூந்துறை வாலிபரை பிடித்து விசாரணை

களியக்காவிளை, ஜன.10: குமரி - கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில் இதில் தீவிரவாத தொடர்புகள் கேரளாவில் அதிகம் உள்ளதாக இருப்பதால் கேரள போலீசாரும் இது தொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அவர்கள் மாநில பகுதிக்குள் வருகின்ற இஞ்சிவிளை, பாறசாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளிகள் காரில் தப்பி சென்றிருப்பதால் அது தொடர்பான தடயங்களை சேகரித்து வருகின்றனர். அவர்கள் எங்கு சென்று பதுங்கினார்கள், வெளிநாடுகளுக்கு ஏதும் தப்பி சென்றார்களா என்பதை கண்டறியும் வகையில் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையம், சர்வதேச விமான நிலையங்களிலும் உஷார்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு வழங்கப்படும். 0471-2722500, 9497900999 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெக்ரா அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் பூந்துறையை ேசர்ந்த ஒரு வாலிபரை போர்ட் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு ஏற்கனவே தென் மாநிலத்தில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலையாளிகள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 2 குண்டுகள் கழுத்து பகுதியிலும், ஒரு குண்டு மார்பிலும் பாய்ந்துள்ளது. அதனால் அவரது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கொலையாளிகள் முகத்தை மறைத்திருந்த வேளையில் இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியுள்ளனர். மேலும் அவரது உடலில் மேலும் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அவை கத்தியால் வெட்டப்பட்டது போல் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Kerala Police ,
× RELATED குற்றவாளிகளை தேடி போன இடத்தில் கேரள...