×

வேலூரில் பரபரப்பு 25 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 40 கிலோ குட்கா பறிமுதல் டிராவல்ஸ் புக்கிங் கடைக்கு ‘சீல்’

வேலூர், ஜன.10: வேலூரில் 25 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா 40 கிலோ பறிமுதல் செய்து, டிராவல்ஸ் புக்கிங் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வேலூர் சைதாப்பேட்டை, மெயின் பஜார் பகுதிகளில் பள்ளிகளின் அருகே தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பதாகவும், இதனை மாணவர்கள் வாங்கி பயன்படுத்தி வருவதாக கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் ஆர்டிஓ கணேஷ் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், தாசில்தார் சரவணமுத்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், ராஜேஷ், இளங்கோ ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் சைதாப்பேட்ைட, மெயின் பஜார், சுண்ணாம்பு காரத்தெரு உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது மெயின் பஜாரில் உள்ள டிராவல்ஸ் டிக்கெட் புக்கிங் செய்யும் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, சிகரெட் ஆகியவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சோதனையில் அட்டைபெட்டிகளில் சுமார் 8 கிலோ போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.கடையும் உரிமம் இன்றி இயங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து ஆர்டிஓ கடைக்கு `சீல்' வைக்க உத்தரவிட்டார். அப்போது கடைக்காரர் இங்கு குட்கா விற்பனை செய்வதே எனக்கு தெரியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைக்காரர் கண்ணெதிரே கடைக்குள் இருந்து குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர், கேஎம். ெசட்டித்தெருவில் உள்ள வீட்டுடன் கூடிய கடையில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் மாடியில் சோதனை செய்த போது, மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்தனர். மொத்தம் 25 கடைகளில் நடத்திய சோதனையில் 40 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா சோதனையில் ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளும் சிக்கியது. குட்கா, பிளாஸ்டிக் பறிமுதல் செய்த 25 கடைகளுக்கும் சுமார் ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kutka ,Traveling Bookstore ,Vellore ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...