×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க விஏஓக்களுக்கு பயிற்சி என்ஐபி டிஎஸ்பி பங்கேற்பு

வேலூர், ஜன.10: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க விஏஓக்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் என்ஐபி டிஎஸ்பி ராமசந்திரன் பங்கேற்றார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க வேலூர் முஸ்லிம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விஏஓக்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. வேலூர், திருவண்ணாமலை மாவட்ட என்ஐபி(போதை தடுப்பு பிரிவு) டிஎஸ்பி ராமசந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தடயவியல் நிபுணர் பாரி(ஓய்வு) முன்னிலை வகித்தார். இவர்கள் 2பேரும் விஏஓக்களுக்கு நேற்று பயிற்சி அளித்தனர். பயிற்சியில், விஏஓக்கள் கஞ்சா விற்பனைையை தடுக்க போலீசாருக்கு எப்படி உதவுவது, தகவல் கொடுப்பவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும். விஏஓக்கள் தான் அந்த கிராமம் முழுவதையும் நன்கு அறிந்தவர்கள் எனவே யார் கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது. கஞ்சா பழக்கத்தினால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பாதை மாறிப்போகிறது. எனவே இளைஞர்களை நல்வழிப்படுத்த விஏஓக்கள் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஏஓக்கள் 45 பேர் வரையில் பங்கேற்றனர்.

Tags : district ,Vellore ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...