×

பவுர்ணமியையொட்டி கடலூர்- திருவண்ணாமலை சிறப்பு ரயில் இன்று முதன்முறையாக இயக்கப்படுகிறது

திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், இன்று அதிகாலை 2.45 மணிக்கு தொடங்கியது. நாளை அதிகாலை 1.43 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வேலூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த பவுர்ணமிக்கு முதன்முறையாக கடலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கடலூர் திருப்பாதிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதிகாலை 11.08 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். அதைத்தொடர்ந்து, 11.10 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 1 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடையும். அதைத்ெதாடர்ந்து, நள்ளிரவு 1.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, 11ம் தேதி அதிகாலை 3.02 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர், 3.04 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.55 மணிக்கு கடலூர் திருப்பாதிபுலியூர் சென்றடையும்.

Tags : Cuddalore-Thiruvannamalai ,time ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான...