×

திருவண்ணாமலையில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, ஜன.10: திருவண்ணாமலையில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இப்போட்டியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 4 நாட்கள் இப்போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் 2019-2020ம் ஆண்டுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் 4 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் வரவேற்றார். போட்டிகளை கலெக்டர் கே.எஸ்.கந்சாமி தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் அருட்செல்வம்(திருவண்ணாமலை), விஜயக்குமார்(செங்கம்), பள்ளி துணை ஆய்வாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை- மணலூர் பேட்டை சாலையில் உள்ள முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கேரம் போட்டியும், மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் போட்டியும் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 மாவட்டங்களை சேர்ந்த 14 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கேரம் போட்டியில் 250 பேரும், நீச்சல் போட்டியில் 1000 பேரும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக சைக்கிள் போட்டி வருகிற 12ம் தேதி(ஞாயிறு) காலை 6 மணிக்கு நடக்கிறது. திருவண்ணாமலை- வேலூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயிலில் இருந்து போட்டி தொடங்குகிறது. இதில் 14 வயதுக்குட்டவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 20 கிேலா மீட்டர் தூரமும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 30 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிள் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகள் வருகிற 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags : Collector ,Thiruvannamalai ,sports competitions ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...