×

பந்தல்குடியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவோம் புதிய ஊராட்சி தலைவர் பாலாஜி பத்ரிநாத் உறுதி

அருப்புக்கோட்டை, ஜன. 9: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பந்தல்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாலாஜி பத்ரிநாத் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். புதிய ஊராட்சி மன்றத் தலைவராக பந்தல்குடி ஊராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் துரைக்கண்ணன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இவருடன் வார்டு உறுப்பினர்கள் அழகுவேல்தாய், சீத்தாபதி, கனகராஜ், ரேணுகாதேவி, அய்யரப்பன், ராஜலட்சுமி, முருகேஸ்வரி, ஆரோக்கியசாமி, முருகன், திவ்யா, காமராஜ், பாண்டியம்மாள் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாகுல்ஹமீது, வேலாயுதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் கொப்பையராஜ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் வேணுகோபால், மனிதத்தேனீ சுந்தரமுர்த்தி, வீரபாகு, தொழிலதிபர்கள் எம்.கே கந்தசாமி, எம்.கே.முருகராஜ், எம்.கே.மாரியப்பன், எஸ்.எஸ்.வி.எம்.செந்தில், வீமராஜ், குருசாமி, அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தாமரை, கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் முத்துக்குமார், ஆசிரியர் ஆரோக்கியசாமி, ஒய்வு பெற்ற ஆர்டிஓ கங்காதரன், பரமேஸ்வரி மில் பொதுமேலாளர் ரவி, ராம்கோ சிமெண்ட் அலுவலர்கள், லக்கி மொபைல் பால்சிங்துரை, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் கவி என்ற ஜெயராஜ், சேதுராஜபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமசாமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேகர், சிபிஎம் சந்திரமோகன், தேமுதிக நிர்வாகி பூமிநாதன், முன்னாள் கூட்டுறவு வங்கித்தலைவர் மாரியப்பன், ஒன்றியக் கவுன்சிலர் பண்டாரச்சாமி, திமுக பிரமுகர் ஜெயராம், பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், கால்நடைத்துறை மருத்துவர் மற்றும் பணியாளர்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், அனைத்து சமுதாய பெரியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  முடிவில் ஊராட்சி செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

புதிய ஊராட்சி மன்றத்தலைவர் பாலாஜி பத்ரிநாத் கூறுகையில், ‘பந்தல்குடி ஊராட்சியில் லஞ்சம் பெறாமல் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.   குடிநீர், ரோடு, வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். ஊராட்சியில் தாமிரபரணி குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக அனைத்து தெருக்களுக்கும் தெருவிளக்குகள் அமைக்கப்படும். பழுதடைந்த தெருவிளக்குகள் உடனடியாக சீரமைக்கப்படும். நவீன சுகாதார வளாகம் அமைக்கப்படும். முக்கிய பிரச்னையான செயல்படாமல் இருக்கும் பந்தல்குடி பஸ்நிலையத்தை செயல்படுத்தி மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் பந்தல்குடி பஸ்ஸ்டாண்டிற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தெருக்களுக்கும் தரமான ரோடு, பேவர்பிளாக் கற்கள் பதிக்க ஏற்பாடு செய்யப்படும். ஊராட்சியை தூய்மை ஊராட்சியாக மாற்றி காட்டுவேன். அனைத்து தெருக்களிலும் குப்பைத்தொட்டி வைத்து, குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். நவீன சுகாதார வளாகங்கள் ஊராட்சியில் பல பகுதிகளில் அமைக்கப்படும். தெருக்கள் மற்றும் ஊராட்சி பொது இடங்கள், பள்ளிகள் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படும். பந்தல்குடியை சோலைவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்ற கடைகள், ஓட்டல்களில் இது குறித்து அறிவுறுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தெருக்களிலும் வாறுகால் வசதி செய்து தரப்படும். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெருமாள்கோவில், முத்தாலம்மன் கோவில் பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கப்படும். பந்தல்குடி ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றி காட்டுவேன்’ என்றார்.

Tags : Balaji Badrinath ,Pandalgudi ,
× RELATED பந்தல்குடி, திருச்சுழி ரோடு பகுதியில் புதிதாக போர்வெல் அமைக்க கோரிக்கை