×

தவறான சிகிச்சையால் கணவரின் கால் அகற்றம் மருத்துவர் மீது நடவடிக்கை கோரி மனைவி மனு

விருதுநகர், ஜன. 9: சாத்தூரை சேர்ந்த சுதா தனது காலை இழந்த கணவன், இரு மகள்களுடன், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறி ராஜபாளையத்தில் டை பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மொத்த விற்பனையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்ராஜபாளையம், ஜன.9: ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜபாளையத்தில் பழைய பஸ்நிலையம், தென்காசி ரோடு, மதுரை ரோடு, சீனியப்ப  நாடார் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், பெட்டிக் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் தலைமையில், நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு சில கடைகளில் இருந்த தடை பிளாஸ்டிக் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.   மேலும், கடைகளுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மொத்தக் கடையில் இருந்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளருக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட  பரப்புரையாளர்கள் உடனிருந்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், ‘அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். கடைகளில் சோதனை தொடரும். பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

Tags : foot doctor ,
× RELATED பணம் திருடியவர் கைது