×

சிவகாசியில் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கடையடைப்பு

சிவகாசி, ஜன. 9: ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து நாடு முழுவதும் வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனடிப்படையில், சிவகாசி வட்டார செல்போன் சில்லரை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் புதிய செல்போன் வாங்குபவர்கள், ரீசார்ஜ் செய்யும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து செல்போன் கடை உரிமையாளர்கள் கூறும்போது, ‘ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய சில்லறை வணிகம் முற்றிலும் அழிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது’ என்று தெரிவித்தனர்.

Tags : Shop ,Sivakasi ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி