×

முத்தனேந்தலில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மனு

சிவகங்கை, ஜன.9: மானாமதுரை அருகே முத்தனேந்தலில் வேகத்தடை, நிழற்குடை அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் விக்டோரியாபாக்யராஜ் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மானாமதுரை தாலுகா முத்தனேந்தல் கிராமம், மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இவ்வழியே வாகனங்கள் அதி வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அல்லது பேரி கார்டு தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தனேந்தல் கிராம பஸ் ஸ்டாப்பை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த ஸ்டாப்பில் நிழற்குடை இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் நேரங்களில் கடும் அவதி ஏற்படுகிறது. இரவு நேரத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இருட்டிலேயே நிற்க வேண்டியுள்ளது. இதனால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் பாதிப்பு கருதி போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா