×

மூணாறில் தூய்மை படுத்தும் பணி தேவிகுளம் எம்.எல்.ஏ, மாணவர்கள் களம் இறங்கினர்

மூணாறு, ஜன. 9: மூணாறில் துவங்கியிருக்கும் குளிர்கால திருவிழாவை முன்னிட்டு மூணாறை தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. இதில் தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜேந்திரன் மற்றும் மாணவ மாணவிகள் நகரை தூய்மைப்படுத்தினர்.
மூணாறில் வரும் ஜன.10ம் தேதி முதல் குளிர்கால திருவிழா துவங்கப்படவுள்ளது. இந்நிலையில் மூணாறை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு துவங்கிய தூய்மை பணியில் தேவிகுளம் எம்.எல்.எ எஸ்.ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன், கே.டி.ஹச்.பி. நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மூணாறு ரிஜியனல் அலுவலகம் முதல் நல்லத்தண்ணி பகுதி வரை பணி நடைபெற்றது. மேலும் தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் முக்கிய சாலைகளில் தண்ணீர் பாய்ச்சி சாலைகள் தூய்மை படுத்தப்பட்டது. மேலும் தினந்தோறும் காலை 11 மணியளவில் பஞ்சாயத்து வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற இந்த தூய்மை படுத்தும் பனி மூணாறு பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Devikulam MLA ,Munnar ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...