×

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது

பரமக்குடி, ஜன.9: பரமக்குடியில் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட. மத்திய தொழில் சங்கத்தைச் சார்ந்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க சட்டம் இயற்றவேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றக்கூடாது, நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளருக்கான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பரமக்குடி சந்தை திடல் பகுதியில் இருந்து பேரணியாக சென்று பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பரமக்குடி எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை   ICEU பரமக்குடி கிளை தலைவர்  ரவிச்சந்திரன்   துவக்கி வைத்தார்.  பால்ராஜ் மற்றும்  அண்ணாத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்   லிகாய் முகவர் சங்கத்தின் சார்பாக கருணாகரன்  பேசினார். ஆர்ப்பாட்ட கோசங்களை எழுச்சியுடன் முழங்கப்பட்டது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை