கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

பேரையூர், ஜன.9: சேடபட்டி போலீசார் அப்பகுதியில் போதைப்பொருள் தடுப்பது சம்மந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேடபட்டி அருகே அதிகாரிபட்டியில் கொப்பையன்(65) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தார். அங்கு வந்த போலீசார் அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் 18 ஆயிரத்து 300 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, கொப்பையனை கைது செய்தனர்.

Tags :
× RELATED ஒட்டன்சத்திரத்தில் கஞ்சா விற்றவர் கைது