×

நத்தம் அருகே மதகு ஷட்டரை திருடிய 4 பேர் கைது

நத்தம், ஜன. 9: நத்தம் அருகே மதகு ஷட்டரை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நத்தம் அருகே செங்குளம், அழகன் கோடாங்கி குளம், வெள்ளபிச்சன் குளம் ஆகிய குளங்களில் இரும்பால் ஆன மதகு ஷட்டர்கள் திருடு போயின. இதுகுறித்து பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் செல்லையா நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் மெய்யம்பட்டியை சேர்ப்த சேகர் (37), முருகன் (30), பாண்டி (40), மணிகண்டன் (25) ஆகியோர் மதகு ஷட்டர்களை திருடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, திருடிய மதகு ஷட்டர்களை கைபற்றினர்.

Tags : Nadam ,
× RELATED அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை...