×

பழநியில் திருப்பாவை போட்டி பரிசளிப்பு விழா

பழநி, ஜன. 9: பழநியில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவிப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்படி ஆண்டுதோறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கிடையே மார்கழி மாதத்தில் பாவை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை தெய்வீக பாசுரங்களில் இருந்து ஒப்புவித்தல் போட்டி, இசை போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 2019-20ம் ஆண்டிற்கான பாவை விழா போட்டிகள் கடந்த ஜன. 3ம் தேதி நடந்தது.

இப்போட்டியில் பழநி பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளியின் தமிழாசிரியர் முருகானந்தம் வரவேற்று பேசினார். முதல்வர் அன்னபூரணி முன்னிலை வகித்தார். பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார். கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து பரிசு பொருட்களை உபயமாக வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Palani Tirupai Competition Gifting Ceremony ,
× RELATED பழநியில் திருப்பாவை போட்டி பரிசளிப்பு விழா