×

திண்டுக்கல் ஜங்சன் பாலத்தில் இரவுநேரம் ரோந்து பணி வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஜன. 9: திண்டுக்கல் ரயில்நிலையம் முகப்பு மேம்பால பகுதியில் இரவுநேரம் போலீசார் ரோந்து பணி செல்ல வேண்டும் என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் நாகல்நகர் அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் நம்பிக்கை நாதன் தலைமை வகிக்க, செயலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவிக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் சிறுமலை செட் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திண்டுக்கல் ரயில் நிலையம் முகப்பு மேம்பாலம் இரு பகுதியிலும் இரவு நேரம் காவல்துறை ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்.

ரயில் நிலையம் முகப்பு பஸ் செல்லும் பாதை பகுதியில் மேம்பாலம் கீழ் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். நாகல்நகர் மேம்பாலம் முன்பு நிறுத்தும் பேருந்துகளை சிண்டிகேட் பேங்க் முன்பு நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மேம்பாலம் கைப்பிடி சுவர் சேதமடைந்து ரயில்நிலையம் செல்லும் பயணிகள் மேல் அடிக்கடி விழுகிறது. அதனை பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். மேம்பாலம் இருபுறமும் கீழ்ப்பகுதி தெருவிளக்குகள் வெளிச்சம் அதிகம் உள்ள பல்புகள் பொருத்த வேண்டும். சேதமடைந்துள்ள பெல்பார்க் ரோடு, ஸ்கீம் ரோட்டை சீரமைப்பு பணி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : patrol workers ,union meeting ,Dindigul Jungson Bridge ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்