×

பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம், ஜன.9:பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து, நாளை முதல்  பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தில் இருந்து, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (10ம் தேதி) முதல் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டம் மூலமாக சென்னையிலிருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், நாமக்கல் வழியாகவும், பெங்களூருவிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, குமுளி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல், சேலத்திலிருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூர், கடலூர், பெங்களூரு, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய வழித்தடங்களிலும் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுதவிர, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாகவும், கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. இந்த 4 மாவட்டங்களின் நகரப்பகுதிகளில்,  அனைத்து நேரங்களிலும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் டவுன் பஸ்கள் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாளை (10ம் தேதி) முதல், பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் நகர பஸ்கள் இயக்கப்படும். நாளை முதல் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : festival ,Salem Fort ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!