கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

பள்ளிபாளையம், ஜன.9: குமாரபாளையம் வேமங்காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட  வீராங்கனை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடியல் சேவை அமைப்பின் தலைவர் பிரகாஷ் தலைமை  தாங்கி பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கௌரி முன்னிலை வகித்தார். சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் மாணவ -மாணவிகளுக்கு கட்டுரை,  ஓவியம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சென்னை உன்னத இயக்கத்தின் தலைவர் காந்தி கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். விழாவில் ஆசிரியர்கள் நிமலன், விஜய், கண்ணன்,  கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழாசிரியர்  குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>