×

மனநோயாளிகள் காப்பகத்தில் சேர்ப்பு கருணை காட்டிய அட்சயம் அமைப்பினர்

குமாரபாளையம், ஜன.9: பல ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த 3 மனநோயாளிகள் மீது கருணை கொண்ட அட்சயம் அமைப்பினர் அவர்களை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்து காப்பகத்தில் சேர்த்தனர். தெருக்களில் யாசகம் பெற்று வாழ்வோர்களை மீட்டு அவர்களின் உடல் திறனுக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் சேவையில் அட்சயம் அமைப்பினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். யாசகம் பெறுவோரை தவிர மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது கருணை கொண்டு அவர்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியினை தற்போது மேற்கொண்டுள்ளனர். குமாரபாளையத்தில் பல வருடங்களாக குளிக்காமல் சுற்றி வரும் மனநோயாளியிடம் தொடர்ந்து பேசி, அவரை காப்பகத்தில் சேர்க்க ஒப்புதல் பெற்ற அட்சயம் அமைப்பினர், முதியவருக்கு முடிவெட்டி முகச்சவரம் செய்து, புத்தாடை அணிவித்து தர்மபுரி மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மனநிலை பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றி வந்த பெண்ணையும் தர்மபுரி காப்பகத்தில் சேர்த்தனர். கடந்த காலங்களில் தெருக்களில் யாசகம் பெற்று வந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என 419 பேர்களை அட்சயம் அமைப்பினர் மீட்டுள்ளனர். குமாரபாளையத்தில் தொடர்ந்து யாசகர்கள் மீட்கப்பட்ட போதிலும் பேருந்து நிலையத்தில் அவப்போது புதிய யாசகர்கள் உருவாகி விடுகின்றனர். முதற்கட்டமாக குமாரபாளையத்தில் அரசு உதவியோடு ஒரு சிறப்பு முகாம் நடத்தி, ஆதரவற்ற உண்மையான யாசகர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து, யாசகர் இல்லாத குமாரபாளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, இந்த அமைப்பின் தன்னார்வலர் நவீன்குமார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : charity shop ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்