×

திருச்செங்கோட்டில் நாளை திமுக இளைஞரணி கூட்டம்

திருச்செங்கோடு,  ஜன.9: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி கூட்டம், நாளை 10ம் தேதி   காலை 10 மணிக்கு, திருச்செங்கோடு திமுக அலுவலகத்தில் நடக்கிறது. மேற்கு  மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். மாவட்ட  இளைஞர் அணி அமைப்பாளர்  மதுரா செந்தில்  வரவேற்கிறார். இந்த  கூட்டத்தில் கடந்த 4ம் தேதி சென்னையில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி  ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  பற்றி  விளக்கி கூறப்படுகிறது. மேலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை  முன்னிட்டு நடக்கும் தங்க கோப்பை கிரிக்கெட்  போட்டிக்கு அணிகளை தேர்வு  செய்து அழைத்துச்செல்வது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.பொங்கல்  விழா கொண்டாடுவது  மற்றும் இளைஞர் அணி ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை  நடக்கிறது. எனவே, இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள்  மற்றும் துணை அமைப்பாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட இளைஞர்  அணி அமைப்பாளர் மதுரா செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : DMK ,youth meeting ,Tiruchengode ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...