×

உள்ளாட்சி தேர்தல் கூத்து பெயர் நீக்கப்பட்ட வேட்பாளர் வாக்களித்த பின் முடிவு அறிவிப்பு

வேப்பனஹள்ளி, ஜன.9:   வேப்பனஹள்ளி ஒன்றியம் அளேகுந்தானை ஊராட்சியில், வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்ட வேட்பாளர் பெயர், வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டு வாக்களித்த பின்னர், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2011ம் ஆண்டிற்கான சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியலை கொண்டு நடத்தப்பட்டது. வேப்பனஹள்ளி ஒன்றியம் அளேகுந்தானை ஊராட்சியில் வார்டு எண் 9க்கான உறுப்பினர் தேர்தலில் லலிதா, செல்வி, ராதா ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த மாதம் 23ம் தேதி, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்பட்டியலில் லலிதா என்ற வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டிருந்து. இதற்கு லலிதாவின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, லலிதாவிற்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் வாக்களித்ததைத் தொடர்ந்து, நேற்று அந்த வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை கிருஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர் தலைமையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், ராதா என்ற வேட்பாளர் 7 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம், உள்ளாட்சி தேர்தல்கள் முறையாக நடத்தப்படவில்லை என்பதை காட்டுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தினர்.

Tags : candidate ,election ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...