×

ஓசூர்-ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு

ஓசூர், ஜன.9: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜோலார்பேட்டை இடையே ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் குறித்து, கிருஷ்ணகிரி தொகுதி எம்பி செல்லகுமார் ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தொழில் அதிபர்கள், அதிகாரிகள், வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களை சந்தித்து தெரிவித்தார். பின்னர், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய ரயில்வே துறையிடம் சமர்ப்பித்தார். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் வழங்கப்பட்டது.
இதையடுத்து தெற்கு ரயில்வே இயக்க முதன்மை மேலாளர் கோவிந்தசாமி, முதன்மை பொறியாளர் ஜீவநாயகம், ரயில்வே துறை ஆய்வாளர்கள் ராமநாதன், மாலிக் ஆகியோர் ஓசூர் ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது, ஓசூர் ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் இணைச் செயலாளர் வெற்றி.ஞானசேகரன், கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags : Hosur-Jolarpet ,
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது