×

கிருஷ்ணகிரியில் எல்ஐசி ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.9: மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து கிருஷ்ணகிரியில் எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து, கிருஷ்ணகிரியில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி எல்ஐசி கிளை அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் மாது, பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காப்பீட்டு வணிகத்தை பாதிக்கும் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். எல்ஐசி பங்குகளை விற்கும் முயற்சியை கைவிட வேண்டும். அனைவருக்குமான பென்சன் திட்டை நிறைவேற்ற வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : LIC Employees Union ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்