×

சூளகிரியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்


கிருஷ்ணகிரி, ஜன.9:  சூளகிரியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என சட்ட சபையில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன், நேற்று சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது பேசியதாவது: எனது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி தாலுகா உருவாகி 6 ஆண்டுகளாகிறது. இந்த தாலுகாவில் சூளகிரி, உத்தனப்பள்ளி, பேரிகை, பாகலூர் ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள் உள்ளது. இக்காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகள் சம்மந்தமாக நீதிமன்றத்திற்கு சுமார் 30, 40 கி.மீ தொலைவில் உள்ள ஓசூர் நீதிமன்றத்திற்கு சென்றுவர வேண்டியுள்ளது. எனவே, சூளகிரி பகுதியில் ஒரு நீதிமன்றம் அமைத்து தர இந்த அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம், எம்எல்ஏ., முருகன் கோரிக்கையின்படி, சூளகிரியில் புதிய நீதுமன்றம் அமைப்பதற்காக, வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், உயர்நீதிமன்றத்தின் கருத்துரு பெறப்பட்டு, அதற்கு வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், கண்டிப்பாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் என பதில் அளித்தார்.

Tags : Court ,
× RELATED ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு