×

தேன்கனிக்கோட்டை, சூளகிரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்; 100 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜன.9:  தேன்கனிக்கோட்டை, சூளகிரியில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைளை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை தபால் அலுவலகம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நஞ்சப்பா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா, பழனி, நாகராஜ், சலாம்பேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல், அஞ்செட்டியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர். சூளகிரி: சூளகிரியில் நடைபெற்ற மறியலில், சிபிஐஎம் வட்ட செயலாளர்கள் நாகராஜ், ஜெயராமன் தலைமையில் நிர்வாகிகள் முனியப்பா, சீனிவாஸ், லட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Communist Party ,Strike ,Thenkanikottai ,Sulagiri ,
× RELATED பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி...