×

சேர்மன் பதவி ஏற்பு விழா பணி தீவிரம்

காரிமங்கலம், ஜன.9: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் தேர்தல் கடந்த 30ம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடந்தது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் 14 பேரும், திமுக கூட்டணியை சேர்ந்த 7 பேரும் வெற்றி பெற்றனர். அதிமுக கூட்டணியில் 14பேர் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக தக்க வைத்துள்ளது. அதிமுக சார்பில் கும்பாரஅள்ளி ஊராட்சி 7வது வார்டில் வெற்றி பெற்ற சாந்தி பெரியண்ணன் ஒன்றிய குழு தலைவராகவும், புலிக்கல் ஊராட்சி 10வது வார்டில் வெற்றி பெற்ற செல்வராஜ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான மறைமுக தேர்தல், வருகிற 11ம் தேதி காலை 11 மணிக்கு காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. இதை தொடர்ந்து பதவி ஏற்பு விழா நடக்கிறது. இதற்காக ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கவுன்சில் ஹாலில் வர்ணம் பூசுதல், இருக்கைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மறைமுகத் தேர்தல் மற்றும் பதவி ஏற்புகான ஏற்பாடுகளை, பிடிஓக்கள் வெங்கடேசன், வடிவேலன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : acceptance ceremony ,Chairperson ,
× RELATED திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி ஆண்டு விழா