×

தூள்செட்டி ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டம்

தர்மபுரி, ஜன.9:  தூள்செட்டி ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு தாலுகாவில் கடந்த 10ஆண்டுகளாக மழை அளவு குறைந்து போனதால் ஏரி, குளங்கள், குட்டைகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழே போய்விட்டது. லட்சக்கணக்கில் செலவு செய்து ஆழ்துளை கிணறு தோண்டியும் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் போதுமான நீர் கிடைப்பதில்லை.
இதனால் மா, தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் காய்ந்து கோடிக்கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கருப்பு பகுதி பட்டியலில், பாலக்கோடும் இடம் பெற்றுள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள், வாழ்வாதாரத்திற்காக வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஆழியாளத்தில் இருந்து தென்பெண்ணையாற்று கால்வாயை விரிவுபடுத்தி, பாலக்கோடு மாரண்டஅள்ளி அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு நீர் கொண்டுவரும் திட்டத்தை விரைவாக செயல்படுத்தி, ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dulcette Lake ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா