கஞ்சா விற்ற 2 பேர் கைது

சேதுபாவாசத்திரம், ஜன. 9: சேதுபாவாசத்திரம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குப்பத்தேவன் ராமுத்தேவர் மனைவி செல்லம்மாள் (73) என்பவர் தனது வீட்டில் ஒரு கிலோ 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்லம்மாளை போலீசார் கைது செய்தனர். அதேபோல் மல்லிப்பட்டினம் சின்னமனையில் காசிநாதன் மனைவி மருதாயி (38) தனது வீட்டில் 1 கிலோ 25 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருதாயியை கைது செய்தனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற 2பேர் கைது