×

விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

தஞ்சை, ஜன. 9: விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மேலாத்துகுறிச்சியை சேர்ந்த சின்னதம்பி மகன் லட்சுமணன் (26). டிராக்டர் டிரைவர். இவர் 2017ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் பின்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் லட்சுமணன் படுகாயமடைந்து இறந்தார். இந்நிலையில் லட்சுமணன் தந்தை சின்னதம்பி இழப்பீடு வழங்ககோரி தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.13,90,200 வழங்க வேண்டுமென கடந்தாண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் அத்தொகையை வழங்காததால் சின்னதம்பி, நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்துக்கு நிறைவேற்று ஊழியர் ஜெயந்தி தலைமையில் வழக்கறிஞர் ரகுபதி மற்றும் ஊழியர்கள் சென்று வேலூருக்கு செல்லவிருந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Government bus japti ,deceased ,
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...