×

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்

பெரம்பலூர்,ஜன.9: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார்கள், குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவி க்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது : தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அரிசிபெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், 2 அடி நீள கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பண ம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (9ம்தேதி) முதல் 12ம்தேதி முடிய அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 9 மணிமுதல் 1மணி வரை யிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6மணி வரை யிலும் பகுதி வாரியாக பிரித்து வழங்கப்படும். விடுப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதியன்று பொங்கல் பரி சுத்தொகுப்பு மற்றும் ரொ க்கத் தொகை ரூ.1,000 வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி குடு ம்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளில் மின்னணு குடும்ப அட்டையுடன் குடும்ப அட்டை தார ரோ அல்லது அந்த குடும்ப அட்டையில் இடம்பெற்று ள்ள யாரேனும் ஒரு வரோ நேரில் சென்று, தமிழக அர சின் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற் றுக் கொள்ளலாம். இந்தப் பணியை கண்காணிக்க சப்.கலெக்டர் நிலையில் உள்ள கண்காணிப்பு அலு வலர்கள் நியமிக்கப்பட்டு ள்ளனர். இது குறித்துப் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை பெரம் பலூர் தாலுக்காவிற்கு, மா வட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின ர் நல அலுவலரை 9445477 838 என்ற எண்ணிலும், பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலரை 9445000271 என்ற எண்ணிலும், வேப்ப ந்தட்டை வட்டத்திற்கு மாவ ட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லரை- 7338801267 என்ற எண்ணிலும், வேப்பந்தட் டை வட்டவழங்கல் அலுவல ரை 9445000272 என்ற எண்ணிலும், குன்னம் வட்ட த்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலரை 944500 0270 என்ற எண்ணிலும் குன்னம் வட்ட வழங்கல் அலுவலரை 9445000273 என்ற எண்ணிலும், ஆலத் தூர் வட்டத்திற்கு பொது விநியோகத்திட்ட துணைப் பதிவாளர் 9443592506 என் ற எண்ணிலும், ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலரை 9445796445 என்ற எண்ணி லும்தொடர்புகொள்ளலாம். மேலும் பெரம்பலூர் மாவட் டக் கலெக்டர் அலுவலகத் தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நியமனம் செய்துள்ள அலுவலருக்கு 9445476298 என்ற எண்ணில் புகார்கள் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி