சங்கரன்பந்தல் அரசு மருத்துவமனை அருகே குவிந்து கிடக்கும் குப்பை அகற்றப்படுமா?

தரங்கம்பாடி, ஜன.9: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே குவிந்து கிடக்கும் குப்பைமேட்டை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கரன்பந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனையாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஏழை, எளிய கிராம பெண்கள் பிரசவத்திற்காகவும் இங்கு வருகிறார்கள். மருத்துவமனைக்கு எதிரே குப்பைகள் குவிந்து கிடப்பது சுகாதாரக் கேட்டை விளைவிப்பதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சப்படுகின்றனர். மருத்துவமனைக்கு எதிரே உள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே நோயாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். எனவே குப்பைமேட்டை உடனே அகற்றி தூய்மைப்படுத்த வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sankaranpandal ,Government Hospital ,
× RELATED பெரம்பலூரில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்