பொதுமக்கள் எதிர்பார்ப்பு சீர்காழி அருகே கோடங்குடியில் வயலில் சாய்ந்து நிற்கும் மின்கம்பம்

சீர்காழி, ஜன.9: சீர்காழி அருகே கோடங்குடி ஊராட்சியில் வயலில் சாய்ந்த நிலையில் நிற்கும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சி கோடங்குடி கிராமத்தில் நடவு செய்த வயல் வழியாக செல்லும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் பல ஆண்டுகளாக இருப்பதால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் வயல்களில் உழவு பணி நடவு பணி அறுவடை பணி செய்யும்போது விவசாயிகள் அச்சத்துடனேயே பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அறுவடை செய்தபின் நெல் மூட்டைகளையும். வைக்கோல்களையும் வாகனங்களில் ஏற்றி வரும் போது விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. சாய்ந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. சாய்ந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சாய்ந்த மின்கம்பத்தால் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : field ,corridor ,Kodankudy ,
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்...