×

முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

முத்துப்பேட்டை, ஜன.9: முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சென்ற மாதம் புதியதாக பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து செயல் அலுவலரின் அதிரடி தொடர் நடவடிக்கையால் சாலை, தெருக்கள், கடைத்தெரு ஆகிவைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். இருந்தும் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது பேரூராட்சிக்கு பெரும் சவாலாகவே உள்ளது. அதனால் குப்பை கிடக்கும் பகுதியில் பேரூராட்சி குப்பைகளை அகற்றிவிட்டு சுத்தம் செய்துவிட்டு போன மறுநிமிடமே அங்கு மக்கள் குப்பைகள் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் என்ன செய்வது, என்று திக்கு தெரியாமல் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளிவாசல், கோயில் போன்ற வழிப்பாடு தளங்கள் அருகே குப்பைகள் கொட்டுவதையாவது தடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை பெரியக்கடைதெரு அருகே உள்ள முகைதீன் பள்ளிவாசல் சுவரோரம் தினந்தோறும் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவது அதனை பேரூராட்சி வாரத்திற்கு ஒரு முறை, சில நேரங்களில் மாதம் கடந்து அகற்றுவது, அது வரை அப்பகுதி குப்பை கிடங்கு போல் மாறி அசுத்தமாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றத்தால் கொசுக்கள் உற்பத்தி தொற்றுநோய் பரவுதல் போன்ற மோசமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் நேற்றுகூட முகைதீன் பள்ளிவாசல் சுவரோரம் குப்பைகள் கழிவுகள் சாலையில் கொட்டி கிடக்கிறது. இதனால் தொழுகைக்கு செல்லும் இஸ்லாமியயர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. அதேபோல் குத்பா பள்ளி வாசல் எதிர், அதேபோல் காளியமான் கோவில் தெரு உட்பட வழிப்பாடு தளங்கள் அருகே குப்பைகள் கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகம் தடை செய்து நடவைக்கைகள் எடுத்து அப்பகுதியை தூய்மைப்படுத்தி வழிபாடு தளங்களை கண்ணியம் காக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : school premises ,
× RELATED பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள்...