×

காதல் மனைவி பிரிந்த விரக்தி குளத்தில் விழுந்து வாலிபர் தற்கொலை

மன்னார்குடி, ஜன.9: காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வடுவூர் அருகே வாலிபர் ஒருவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட எடகீழையூர் கிரா மத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் (30). கூலித் தொழிலாளியான கோயம்புத்தூரில் வேலை செய்த போது அப்பகுதியை சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் எடகீழையூர் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவியிடையே நடந்த குடும்ப பிரச்னையால் சுவேதா கோபித்து கொண்டு குழந்தையை அழைத்து கொண்டு கோயம்புத்தூர் சென்று விட்டார். பலமுறை இளஞ்செழியன் தனது மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த இளஞ்செழியன் கடந்த 6ம் தேதி அதிகாலை முதல் காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் எடகீழையூர் கிராமத்தில் உள்ள செட்டிக்குளத்தில் இளஞ்செழியன் சடலமாக கிடப்பதை கண்ட அவரின் உறவினர்கள் சிலர் அது குறித்து வடுவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் பசுபதி, எஸ்ஐ தங்க மாதவன் உள்ளிட்ட போலீசார் இளஞ்செழியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இளஞ்செழியனின் சகோதரி இளஞ்ஜோதி வடுவூர் போலீசில் கொ டுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : suicide ,love pool ,
× RELATED வேதாரண்யம் அருகே முதியவர் தற்கொலை