×

பின்னலாடை தொழில் பயிற்சியை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்

திருப்பூர், ஜன. 9:  தொழில் பழகுனர் பயிற்சி திட்டத்தை மாவட்ட நிர்வாகம் பயனாளிகளை தேர்ந்தெடுத்து உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கவேண்டுமென மக்கள் விழிப்புணர்வு இயக்கம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
 இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். திருப்பூர் பின்னலாடைக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்திக்கு ஏற்ப தொழிலாளர்கள் இல்லாததால் தினமும் அவதிப்படுகின்றனர். வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்தாலும் திடீரென தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு கும்பலாக சென்று விடுகின்றனர். இதனால், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் புரோக்கர்களுக்கு மீண்டும் பணம் கொடுத்து புதிய ஆட்களை அழைத்து வரவேண்டிய நிலை உள்ளது. புதிய தொழிலாளர்களுக்கு வேலை பழகவே பல மாதங்கள் ஆகும். வேலை பழகியவுடன் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். இதனால், உற்பதி குறைவதுடன் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாமல் நிறுவன உரிமையாளர்கம் அவதிப்படுகின்றனர்.

 பின்னலாடை நிறுவனங்கள் வௌி மாநில தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, இலவச உணவு வழங்கி சம்பளம் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் உதவித்தொகையுடன் பின்னலாடை தொழில் பயிற்சி பழகுனர் திட்டம் துவங்க வேண்டும். பயிற்சி முடித்த தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து அதிக சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தினால் நிரந்தரமாக வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். திருப்பூரில் ஒரு சில நிறுவனங்கள் பின்னலாடை குறித்த பயிற்சி பழகுனர் திட்டம் என்ற பெயரில் பயற்சி கட்டணமாக பணம் வசூலிக்கின்றனர். ஒரு சிலர் பயிற்சி அளித்து மத்திய அரசிடம் மொத்தமாக பணம் வசூலித்துக்கொள்கின்றனர். இது குறித்து போதிய படிப்பறிவு இல்லாத தொழிலாளர்கள் ஏமாறுகின்றனர். இலவச பயிற்சி என்ற பெயரில் மத்திய அரசின் உதவித்தாகையை தொழில் பழகுனர்களுக்கு வழங்காமல் தாங்களே வைத்துக்கொள்கின்றனர். இந்த முறைகேடுகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொழில் பழகுனர்களை தேர்ந்தெடுத்து மத்திய அசு வழங்கும் உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தவேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags : district administration ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்