×

மன்னார்குடியில் சீரான மின்விநியோகம் கிடைக்க நடவடிக்கை சட்ட பேரவையில் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

சென்னை, ஜன.9: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா(திமுக) பேசியதாவது: மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின் பிரச்னை காரணமாக வீடுகளுக்கும், விவசாய பம்பு செட்களுக்கும் மின் வினியோகம் செய்வதில் பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே, மூவாநல்லூர் விரிவாக்கத்திலிருந்து மன்னார்குடி, வடபாதி, சீத்தேரி 33 கே.வி.துணை மின் நிலையத்துக்கு லைன் எடுத்து கொண்டு போகிறார்கள். இப்போது புதிதாக நெடுவாக்கோட்டையில் ஒரு லைன் எடுத்து அங்கே ஒரு எஸ்.எஸ். அமையப்பெற்று வருகிறது. நீடாமங்கலம், எடமேலையூர் பகுதிகளிலும், வடூரிலிருந்து லைன் எடுத்து கொண்டு போய் ஒரு பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே மெதுவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

புதிதாக பைங்காநாடு, முக்குளம், சாத்தனூர், கருவாக்குறிச்சி மையம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் 33 கே.வி. துணை மின் நிலையம் அமைத்தால் மட்டும் தான் அந்த பகுதி முழுவதும் ஸ்டெப்ளைஸ் ஆகும். அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  சவலக்காரன் பகுதியில் ஒரு 110 கே.வி.துணை மின் நிலையம் அமைந்தால் மட்டும் தான், அங்கே கிழக்கு பகுதியில் முழுவதுமாக மின்வினியோகம் ஸ்டெப்ளைஸ் ஆகும். அதே போல், கூத்தா நல்லூர் பகுதியில் ஒரு 230 கே.வி.துணை மின் நிலையம் அமைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அங்கே நிலம் எடுப்பதில் அரசுக்கு கொஞ்சம் பிரச்னைகள் இருக்கிறது. பொதுவாக டிரான்பார்மர்ஸ் கிடைப்பதில் சில பிரசனைகள் இருக்கின்றன. அதையும் கவனத்தில் கொண்டு மன்னார்குடி பகுதியில் சீரான மின்விநியோகம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்துறை அமைச்சர் தங்கமணி: இடம் கண்டறியப்பட்டால் அங்கே துணை மின் நிலையம் அமைக்கப்படும். பணி மெதுவாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதை அதிகாரிகள் உடன் ஆய்வு செய்து, அதை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : TRP Raja ,Convention ,Mannargudi ,
× RELATED தினமும் எனது கார் சோதிக்கப்படுகிறது;...