×

டெல்லி பல்கலை.மாணவர்கள் மீது தாக்குதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

திருத்துறைப்பூண்டி, ஜன.9: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு மாவட்டதலைவர் முஹம்மது மிஸ்கின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லிஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கல்விகட்டணஉயர்வைக் கண்டித்து கடந்தஇரண்டு மாதகாலமாக போராட்டம் நடத்திவந்தனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்டமாணவர்கள் மீது சிலர் முகத்தை மறைத்துக்கொண்டு ஹாக்கி மட்டை,இரும்பு கம்பிஉள்ளிட்டஆயுதங்களோடு கல்லூரியில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பேராசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த தாக்குதல் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய ஜனநாயக அடிப்படையிலான போராட்ட வழிமுறைகளை கெடுக்கும் நோக்கில் வன்முறை கும்பல் செயல்பட்டிருக்கிறது. ஏபிவிபி சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இதுபோன்ற வன்முறைகளில் இறங்குவார்கள். நியாயமானஅடிப்படையில் கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிற மாணவர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் தொடர்வது நமது தேசத்திற்கு அவமானம். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Tamilnadu Jama'at ,attack ,Delhi University ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...