×

சன்மார்க்க சங்க முப்பெரும் விழா

திருப்பூர், ஜன. 9: திருப்பூர் கருவம்பாளையம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில், முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சோமசுந்தரம் இறைவணக்கம் பாடினார். ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பொருளாளர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். பேச்சு போட்டி, திருவருட்பா ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மாணவர் யுவ கார்த்திக் ராஜா வடிவமைத்த, மிக நுண்ணிய குடவறை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஜோதி வழிபாட்டை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதியில் செயலாளர் நீறணி பவளக்குன்றன் நன்றி கூறினார்.

Tags : ceremony ,Sanmarka Sangha ,
× RELATED உத்தராகண்ட்டில் மெஹந்தி விழாவின்போது மணப்பெண் உயிரிழப்பு..!!