×

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்

அறந்தாங்கி, ஜன.9: ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற மார்கழி திருவாதிரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது. மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றிய தலம் ஆவுடையார்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் என இரண்டு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதினம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அறந்தாங்கி போலீஸ் டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Margazhi Thiruvathirai Therottam ,Atmanathaswamy Temple ,
× RELATED அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை...